சுங்குவார்சத்திரம் அருகே 2 புள்ளி மான்கள் மர்மமாக உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரத்தை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 2 புள்ளி மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.

சுங்குவார்சத்திரத்தை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 2 புள்ளி மான்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து அந்த இடத்தின் காவலாளி பெரும்புதூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த புள்ளி மான்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். வனத்துறை அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் இந்த 2 புள்ளி மான்களும் சண்டையிட்டுக் கொண்டு இறந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். புள்ளி மான்கள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது யாரேனும் வேட்டையாடிக் கொன்றார்களா? என்ற கோணத்திலும் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்