இரு வாக்குரிமை பெற்றவர்களால் சரிந்ததா வாக்குப்பதிவு? - காரணங்களை ஆராயும் தேர்தல் ஆணையம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை, மழை உள்ளிட்ட காரணங்களா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாகக் கூறப் படுகிறது.

தமிழகத்தில் இருதினங் களுக்கு முன் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 73.76 சதவீதம் வாக்கு கள் பதிவாகி உள்ளன. பலமுனைப் போட்டியில், இந்த வாக்குப்பதிவு மிக குறைவானதாகக் கருதப் படுகிறது. சென்னையில் 57 சதவீதம் மட்டுமே வாக்குப் பதி வாகியுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிகளை ஒப்பிடும்போது தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் அதிகபட்சமாக 88.50 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 2011-ம் ஆண்டு தேர்தலில் 78.01 வாக்குப்பதிவை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

இந்த தேர்தலின்போது அதி காலை முதல் மாலை வரை தமிழகம் முழுவதும் பரவலாக அடைமழை பெய்தது. மழையிலும் கிராமப்புறங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குடைபிடித்தபடி, தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஆனால், ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நகர்ப் புறங்களில் வாக்குப்பதிவு மந்த மாக இருந்தது. வாக்குப்பதிவு குறை வுக்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

குறிப்பாக தென்மாவட்டங்கள், வடமாவட்டங்களில் பெரியளவில் விவசாயம், தொழில் வளம், வியாபாரம் இல்லை. இதனால், இங்குள்ள படித்த, படிக்காத இளைஞர்கள், மக்கள், சென்னை, திருப்பூர், கோவை, ஓசூர், ஈரோடு மற்றும் பெங்களூருவில் வேலை தேடிச் சென்று விடுகின்றனர். முக்கிய பண்டிகை நாட்களில் மட்டுமே சொந்த ஊர்களுக்கு வரு கிறார்கள். 5 முதல் 10 ஆண்டு வரை நிரந்தரமாக அங்கேயே தங்க நேர்வதால் அப்பகுதியிலேயே வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகள் வாங்கி விடுகின்றனர்.

அதே நேரம் சொந்த ஊரில் உள்ள ரேஷன் கார்டு, வாக்கு ரிமையை நீக்குவதில்லை. அத னால், வேலை, வியாபாரம் நிமித்த மாக சொந்த ஊரை விட்டு தமிழகத்துக்குள்ளேயே வெளியூர் களில் வசிப்பவர்கள் பெரும் பாலானவர்களுக்கு இரண்டு இடங் களில் வாக்குரிமை இருக்கி றது. அதனால், ஒருதரப்பினர் வேலை செய்கிற நகர்ப்புறங்களில் வாக்களிக்காமல் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்கின்றனர். மற் றொரு தரப்பினர் நகர்புறங்களில் வாக்களித்ததால் சொந்த ஊர் களில் அவர்களது வாக்குகள் பதி வாவதில்லை.

தேர்தல் ஆணையம் 100 சத வீதம் வாக்குப்பதிவு, புதிய வாக் காளர்களை வாக்களிக்க வைப் பதில் காட்டிய அக்கறையை இந்த இரண்டு வாக்குரிமையை நீக்குவ தில் காட்டவில்லை. அதனால், வாக்குப்பதிவு சரிவுக்கு இந்த பிரச்சினையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த காலத் தேர்தல்களில், மாலை 4 மணிக்கு மேல் முறை கேடு வாக்குப்பதிவு அதிகம் நடக் கும். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கடுமையான நட வடிக்கைகள், பலமுனைப் போட்டி உள்ளிட்டவற்றால் முறைகேடு வாக்குகள் பதிவு தடுக்கப்பட்டது.

அடைமழை, நடுநிலை மற்றும் புதிய வாக்காளர்களிடம் அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு உள்ளிட்ட வையும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இவற்றில் எது உண்மையான காரணம் என தேர்தல் ஆணையம் மாவட்ட வாரி யாக ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்