உதகை: உதகை உருவாகி 200 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில், உதகையை நவீன மலைவாழ் உறைவிடமாக உயர்த்திய ஜான் சலீவன் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.21) திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையை நவீன மலைவாழ் உறைவிடமாக உயர்த்திய ஜான் சலீவன் நினைவாக உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ரூ.20 லட்சம் செலவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று (மே 21) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜான் சலீவன் உதகையை சிறந்த உறைவிடமாக உயர்த்தி 200-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்குகிறது. உதகை 200-வது ஆண்டை கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஜான் சலீவன் சிலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
» தமிழகத்தில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
» ஐரோப்பாவில் மங்கிபாக்ஸ் பரவல் எதிரொலி: விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரித்தது இந்தியா
இந்த நிகழ்வின்போது, தமிழக அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், எம்பி ஆ.ராசா. நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago