இந்தோனேசியாவில் சிறைபிடிக்கப்பட்டு உயிருக்கு போராடிய குமரி மீனவர் மரணம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: இந்தோனேசியாவில் சிறைபிடிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் நேற்று உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரைச் சேர்ந்த ஏசுதாசனின் மகன் மரிய ஜெசின்தாஸ்(33). இவர், குமரி மற்றும் கேரள மீனவர்கள் 8 பேருடன் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் தீவில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மார்ச் 7-ம் தேதி இந்தோனேசிய கடற்படையால் 8 பேரும் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏப்ரல் 28-ம் தேதி 4 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் மரிய ஜெசின்தாஸ், குமரியைச் சேர்ந்த மற்றொரு மீனவர் இம்மானுவேல், கேரளாவைச் சேர்ந்த ஷிஜின் ஸ்டீபன், ஜெமோன் ஆகிய 4 பேர் தொடர்ந்து இந்தோனேசிய சிறையில் இருந்தனர்.

ஆட்சியரிடம் மனு

கடந்த 10-ம் தேதி மரிய ஜெசின்தாஸுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் போலீஸார் சேர்த்துள்ளனர். சுய நினைவு இழந்து ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைபெற்று வந்தார். மரிய ஜெசின்தாஸை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவரக் கோரி, அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள், குமரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 16-ம் தேதி மனு அளித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மரிய ஜெசின்தாஸ் நேற்றுஉயிரிழந்தார். இத்தகவலைஇந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூத்தூரில் உள்ள மரிய ஜெசின்தாஸின் உறவினர்களைத் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.

இதனால், அவர்கள் அதிர்ச்சிஅடைந்தனர். மரிய ஜெசின்தாஸைஉடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்காததே அவர் மரணமடையக் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர். தூத்தூர் கிராமத்தில் மீனவர்கள் திரண்டு தங்களதுஎதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்