கடலுக்கு நண்டு பிடிக்க சென்ற பொன்னகரம் மீனவர்கள் 4 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடலுக்கு நண்டு பிடிக்க சென்ற நாட்டுப் படகு மீனவர்கள் 4 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து வி.உலகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் அவரது மகன்களான குமாரராஜா (44), மோகனசுந்தரம் (42), யுவராஜ் (39) மற்றும் பாலகிருஷ்ணன் மகன் ராஜ் (30) ஆகியோர் கடந்த 16-ம் தேதி நண்டு பிடிப்பதற்காக கடலில் வலை விரித்துவிட்டு கரைக்கு வந்தனர்.

பின்னர், 3 நாட்கள் கழித்து வலையில் அகப்பட்டிருக்கும் நண்டுகளை பிடித்து வருவதற்காக 19-ம் தேதி அதிகாலையில் குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ், ராஜ் ஆகிய 4 பேரும் கடலுக்கு படலில் சென்றனர். இவர்கள், மாலைக்குள் கரைதிரும்ப வேண்டிய நிலையில், இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களை தொடர்புகொள்ளவும் முடியவில்லையாம். இதுகுறித்த தகவலின் பேரில் சக மீனவர்கள், மீன்வளத் துறையினர் மற்றும் கடலோரக் காவல் படையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்