சென்னை: உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை நிகாத் சரீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உலக குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார். 52 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்" பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை தொடரில் அதிரடியாக ஆடித் தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்குப் பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர். நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச் சிறந்த ஊக்கசக்தியாக விளங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago