சென்னை: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராஜீவ்காந்தியைவிட முதல்வர் ஸ்டாலின்தான் முக்கியம் என்று தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 2011-ல் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக நான் இருந்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை கண்டித்து, ராஜீவ்காந்தியுடன் உயிர்நீத்த குடும்பஉறுப்பினர்களை அழைத்து சென்னை மெரினா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தி எங்களை கைது செய்தனர். அன்று எங்களுக்கு இருந்த உணர்வுகூட இன்று காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு இல்லை.
காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைவிட ஸ்டாலின்தான் முக்கியம்போல தோன்றுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago