உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கோடைவிழாவையொட்டி உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகை வருவர். கோடைவிழாவின் ஒரு பகுதியாக பிரசித்தி பெற்ற மலர்க் கண்காட்சி நடைபெறும். அதன்படி, 124-வது மலர்க் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவர ஜெரேனியம், சைக்லமன் உட்பட275 ரகங்களில் 5.5 லட்சம்மலர் செடிகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மேலும், மலர்க்காட்சிமாடம், கண்ணாடி மாளிகையில் 35,000 வண்ண மலர்த் தொட்டிகளில் நடவுசெய்து பராமரிக்கப்பட்டு வந்த செடிகளில், தற்போது மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த தொட்டிகள் காட்சி மாடத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியின் சிறப்பம்சமாக பல்லாயிரக்கணக்கான மலர்களால் கோவை வேளாண் பல்கலைக்கழகம், ஊட்டி 200,பல்வேறு கலைகளை பறைசாற்றும் கலைஞர்களின் வடிவங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், லில்லியம்ஸ், கொய் மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில், இறக்குமதிசெய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரியவகை மலர் செடிகளின் தொகுப்பு,பல்வேறு மலர்களின் பலவகைஅலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago