சொல்வதையே திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகளா மாணவர்கள்?- வினாத்தாள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டுகோள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கடந்த காலத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 100-க்கு 100 மதிப்பெண் பெறுவது சாத்திய மில்லாத மிக அபூர்வமான நிகழ் வாக இருந்தது. தற்போது மாண வர்கள் தேர்வுகளில் 100 மதிப் பெண் பெறுவது சாதாரண நிகழ் வாகிவிட்டது.

இதற்கு புத்தகங்களில் இருக்கும் தகவல்களை மனப்பாடம் செய்து அப்படியே எழுதுகிற, சிந்தனைத் திறனுக்கு வாய்ப்பே கொடுக்காத வினாத்தாள் தயாரிப்பு முக்கிய காரணம்.

இதுகுறித்து பல்கலைக்கழகங் களுக்கான பாடத்திட்ட தயாரிப்புக் குழு உறுப்பினரும், காந்திகிராமம் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவருமான பேராசிரியர் ஜாகிதா பேகம் கூறியதாவது:

ஒரு சிறந்த வினாத்தாள் மாண வர்கள் அறிவை, மிகத் துல்லிய மாக மதிப்பிடும் வகையில், மாண வர்களை தரம் பிரித்து அறியக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

மாணவர்கள் சிந்தனைத் திறன் களை உயர்நிலை சிந்தனைத் திறன் (Higher Order Thinging Skill), தாழ் நிலை சிந்தனைத் திறன் (LOTS) என 2 வகைகளாகப் பிரிக்கலாம். 1 முதல் 8 வரை உள்ள வகுப்பு களில், தேர்வுகள் தாழ்நிலை சிந் தனைத் திறன்களை தூண்டும் வகையிலும், உயர்நிலை, மேல் நிலை வகுப்புகளில் உயர்நிலை சிந்தனைத் திறன்களை தூண்டக் கூடிய வகையிலும் வினாத்தாள்கள் அமைய வேண்டும்.

புதிய கருத்துகளை உருவாக்கு வது, ஏற்கெனவே அறிந்த கருத்து களை பகுத்தல், தொகுத்தல் உயர்நிலை சிந்தனைத் திறன் என்பதாகும். மருத்துவ நுழைவுத் தேர்வு, முன்பிருந்த பொறியியல் நுழைவுத் தேர்வு, கேட், ஜி மேட், ஐஐடி நுழைவுத் தேர்வுகள், ஐஏஎஸ் முதல் தாள், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான ஸ்லெட், நெட் மற்றும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வு வினாத்தாள்கள் பெரும்பாலும் உயர்நிலை சிந்தனைத் திறன்களை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதனால், இந்த தேர்வுகளுக்காக தனியாக மாணவர்கள் தனித் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டியுள்ளது.

இந்த குறுகிய கால நுழைவுத் தேர்வு தயாரிப்பு மாணவர்களுக்கு வெற்றியைத் தேடி தராது. அதனால், புத்தகங்களில் இருக்கும் தகவல் களை மனப்பாடம் செய்து அப் படியே எழுதும் தாழ்நிலை சிந்தனை திறனை வெளிப்படுத்தும் வினாத்தாளை தவிர்க்க வேண்டும்.

மாநில பாடத்திட்டத்தில் மாண வர்களை சிந்திக்க வைக்கக் கூடிய அளவில் வினாத்தாள் அமைப்பது குறைவாக இருக்கிறது. வயதுக்கு தகுந்தாற்போல், உயர் நிலை வகுப்புகளுக்கு செல்லச் செல்ல தாழ்நிலை சிந்தனைத் திறன் குறைவாகவும், உயர்நிலை சிந்தனைத் திறன் அதிகமாகவும் இருக்கும் வகையில் வினாத்தாள் கள் அமைக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் சொல்வதையே சொல்லும் கிளிப் பிள்ளைகள் அல்ல. பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதற்கு வினாத்தாள் தயாரிப்பு, பாடத்திட்ட தயாரிப்பில் உயர்நிலை சிந்தனைத் திறனுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

உயர்நிலை சிந்தனைத் திறனை தூண்டக்கூடிய வகுப்பறை செயல் பாடுகள், ஆசிரியர்கள் அணுகு முறை மற்றும் வினாத்தாள் அமைந் தால் போட்டித் தேர்வுகள் வேண் டாம் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் மாறுவார்கள். வினாத்தாளில் பாடத்திட்டத்தில் இருந்து விலகி கொஞ்சம் சிந்திக் கக்கூடிய வினாக்களை கேட்டி ருந்தால், அதற்கு உடனே அவுட் ஆஃப் போர்சன் எனக் கூறி, மதிப்பெண் கேட்கும் நிலையில் இன்று மாணவர்கள், பெற்றோர் இருக்கிறார்கள்.

இந்நிலை மாற 6-ம் வகுப் புக்கு மேல் உயர்நிலை சிந்த னைத் திறனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்