ராமேசுவரம்: ராமேசுவரத்தில் ஒரு பகுதியில் கடல் உள்வாங்கி யும், மறுபகுதியில் கடல் சீற்றமாகவும் இருப்பதால் நாட்டுப் படகு மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் கோடை காலத்தில் தென்மேற்கில் இருந்து வீசக்கூடிய சோளக்காற்று சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வடக்கே பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பாம்பன், ராமேசுவரம் ஆகிய இடங்கிளில் கடல் உள்வாங்கியும், தெற்கே மன்னார் வளைகுடா தனுஷ் கோடி கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் காணப்படுகிறது. நேற்று 3-வது நாளாக இதே நிலை நீடித்தது. இதனால் பாம்பன், ராமேசுவரம் பகுதியில் நாட்டுப் படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
இது குறித்து ராமேசுவரம் நாட்டுப் படகு மீனவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் இதுபோன்ற வானிலை மாறி மாறி நிகழ்வது வழக்கம். கடல் நீண்டதூரத்துக்கு உள்வாங்கி படகுகள் தரைதட்டிநிற்கும். இந்த காலங் களில் தொழில் பாதிப்பால் சிரமம் அடைகிறோம். அதுபோல கடல் சீற்ற காலங்களிலும் இப்பகுதியில் படகுகளை நிறுத்த முடியாமல் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டி யுள்ளது. இதற்கு தீர்வாக பாம்பன் வடக்கு மற்றும் ராமேசுவரம் ஒலைக்குடா கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகங்கள் அமைத்துத் தர வேண்டும் என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago