பிளஸ் 2 கணித பாடத்தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர், ஆசிரியர் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேற்று நடந்த கணித பாடத்தேர்வுகள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கணித வினாத்தாளில் 60 சதவீதத்துக்கு மேலானவை நுண்ணறிவு திறன்சார்ந்த கடினகேள்விகள். நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட அதற்கு பதில் அளிக்க சிரமமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் 8, இரண்டு மதிப்பெண் கேள்விகள் 7 கடினமாக இருந்தன. 3 மற்றும் 5 மதிப்பெண் வினாவில்கூட சில மட்டுமே எளிதாக இருந்தன. திருப்புதல் தேர்வுக்கு நேர்மாறாக இந்த வினாத்தாள் வடிவமைப்பு இருந்ததால் அனைத்து தரப்பு மாணவர்களின் மதிப்பெண் குறையக்கூடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதேபோல, விலங்கியல் தேர்வும் கடினமாக இருந்துள்ளது. வணிகவியல் தேர்வை பொருத்தவரை 3, 5 மதிப்பெண் கேள்விகள் தவிர்த்து இதர பகுதிகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்