கோவை: பராமரிப்புப் பணி காரணமாக கோவை-சென்னை சென்ட்ரல் ரயில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘திருவாலங்காடு-அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட திருவள்ளூர்-அரக்கோணம் தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, கோவையிலிருந்து மே 18, 24, 25, 31 மற்றும் ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12680), காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே இந்த ரயில் இயக்கப்படாது. இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து மே 18, 24, 25, 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் பிற்கல் 2.30 மணிக்கு கோவை புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12679), காட்பாடியிலிருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கோவை ரயில்நிலையம் வந்தடையும். சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே இந்த ரயில் இயக்கப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago