சென்னை: நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. கல்வி, சுகாதாரம், தொழில் துறைகளில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவை வழிநடத்தும் தகுதி தமிழகத்துக்கு உண்டு என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி விழாவுக்கு தலைமை தாங்கி பேசியதாவது:
சென்னை பல்கலைக்கழகம் பழமைவாய்ந்தது மட்டுமல்ல. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், தேசியத் தலைவர்களை உருவாக்கிய சிறப்புமிக்கது. தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்தும் நோக்கில்இப்பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது.
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த மொழியான தமிழ், இலக்கியச் செழுமையும், ஆன்மிக சிறப்பும் நிறைந்தது. தமிழின் சிறப்புகள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழ், வழக்காடு மொழியாக வேண்டும்.
மத்திய அரசு முயற்சி
தமிழ் மொழி மீது பிரதமருக்கு தனி மரியாதை உண்டு. பிரதமர் அறிவுறுத்தலின்படி, மற்றமாநிலங்களில் தமிழை 3-வதுவிருப்ப மொழியாக்க மத்திய கல்வி அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்துமாறு முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. கல்வி, சுகாதாரம், தொழில் துறைகளில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவை வழிநடத்தும் தகுதி தமிழகத்துக்கு உண்டு.
ஆங்கிலேயர்கள் நமது பொருளாதாரம், தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு அழித்துள்ளனர். அவர்களது வருகைக்கு முன்பு, தொழில்நுட்பம், விவசாயம், மருத்துவம், வானியல், எஃகு உற்பத்தி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியிருக்கிறது இந்தியா. ஆய்வுப் பணியில் ஈடுபட விரும்புவோர் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 100 மாணவர்களுக்கு பட்டங்கள், சிறப்பு பரிசுகளையும் அவர் வழங்கினார். முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், சட்டப்பேரவை செயலர் சீனிவாசன், திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் எம்.எஸ்.பாஸ்கர் உட்பட 731 பேர் பிஎச்டி பட்டம் பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழா மூலமாக 1 லட்சத்து 41 ஆயிரத்து 662 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி வரவேற்றுப் பேசும்போது, ‘‘சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் வரும் கல்வி ஆண்டு முதல், பட்டப் படிப்புகளில் திருக்குறள் மற்றும் சமூக நீதி தொடர்பான பாடங்கள் தெரிவு பாடங்களாக (Elective Subjects) இடம்பெறும். வரும் கல்வி ஆண்டில் திருநங்கைகளுக்கு இளங்கலை, முதுகலை படிப்பில் இலவச கல்வி அளிக்கப்படும்’’ என்றார்.
இந்த விழாவில், பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைசாமி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கே.பாண்டியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago