பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ‘தட்கல்’ விண்ணப்பம்

சென்னை பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக் கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவ ராஜன், திங்கள் கிழமை வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

ஜூன், ஜூலை மாதத்தில் நடை பெறவுள்ள மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத நிர்ணயிக்கப் பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப் பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருந்த மாணவர்கள், மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நாளை (புதன்) மற்றும் 5-ம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய இரு நாட்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுதிப் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலினை விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.50 மற்றும் இதர கட்டணம் ரூ.35 இத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவு கட்டணம் ரூ.50 சேர்த்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்