கிரிமினல் அவதூறு சட்டப் பிரிவுகள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த சட்டப் பிரிவுகள் எழுத்து, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் அஸ்திரமாக மாறக் கூடாது என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எழுத்து, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக உள்ள பிரிட் டிஷ் காலத்து கிரிமினல் அவதூறு சட்டப் பிரிவுகள் 499 மற்றும் 500-ஐ செல்லாது என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் சுப்பிரமணியன் சுவாமி, ராகுல்காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 19(2)ன்படி சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துரிமையின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். மேலும் பேச்சுரிமை என்பதே அவதூறு இல்லாத பேச்சுதான். அரசியல் சாசனப் பிரிவு 21 - இன்னொருவரின் மதிப்பை குறைக்கும் வகையிலோ அல்லது களங்கப் படுத்தும் வகையிலோ ஒருவரின் பேச்சும், கருத்தும் இருக்கக் கூடாது என்கிறது. எனவே இந்த சட்டப் பிரிவுகள் 499 மற்றும் 500 செல்லும்’’ என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றுதான் என ‘தி இந்து’விடம் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அதேநேரம் இதில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்கின்றனர்.
முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன்:
இது பிரிட்டிஷ் காலத்து சட்டம் என்றாலும் இந்த சட்டப் பிரிவுகள் இந்தியாவுக்கு தேவையான ஒன்றுதான். இந்த சட்டங்களால்தான் தனி நபர்களை கொச்சைப்படுத்தி விமர்சிப்பவர் களுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கிறது. ஆனால் இந்த சட்டப் பிரிவுகள், இப்போது அரசியல் ரீதியாக எழுத்து, பேச்சு மற்றும் கருத்துரிமையை பறிக்கும் ஒரு பழிவாங்கும் அஸ்திரமாக மாறிவிட்டது. ஆட்சியாளர்கள் யார் மீதும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக்கூடாது. நேரடி யாக விமர்சனம் செய்யக்கூடாது என இந்த சட்டங்கள் கடிவாளம் போடும் வகையில் இருக்கக் கூடாது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் மட்டுமே 160-க்கும் மேற்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு கள் தொடரப்பட்டுள்ள து. ஆனால் ஒரு வழக்கில் கூட இதுவரை யாருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாக தெரியவில்லை. ஆக பேச்சு மற்றும் கருத்து சுதந் திரத்தை மிரட் டும் ஒரு ஆயுத மாகத்தான் இந்த சட்டம் பயன்ப டுகிறது. யார் மீதும் எடுத்த உடனே கிரி மினல் அவ தூறு வழக்கு தொடர முடியாது என இந்த சட்டத்தில் சில திருத் தங்களை கொண்டுவர வேண்டும்.
மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ஆர்.காந்தி:
இந்த சட்டப் பிரிவுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒருவரின் அடிப்படை உரிமைகள் கண்டிப் பாக எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால், அந்த உரிமை கள் ஒரு நபரின் புகழுக்கும், கவுர வத்துக்கும் ஊறு விளைவிக்கும் வகையிலும் இருக்கக் கூடாது. எங்கிருந்து இந்த சட்டப் பிரிவுகள் இந்தியாவுக்குள் வந்ததோ, தற்போது அங்கு இந்த சட்டங்கள் இல்லை.
இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் இந்த சட்டங்கள் இல்லை. சர்வதேச நாடுகளில் தனிநபர் கண்ணியத் துக்கு அதிகப்படியான பாதுகாப்பு உள்ளது. இந்தியாவில் பொது நலனுக்காக பேசுபவர்களை, எழு துபவர்களை இந்த சட்டங் களைக் காட்டி மிரட்டக் கூடாது. அதேநேரம், அவதூறு பேச்சு ஒரு கிரிமினல் குற்றம் என்றால்தான் தனிநபர் மாண்பும் பாதுகாக்கப் படும் சூழல் இந்தியாவில் உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற இளம் வழக்கறிஞர் நீத்து ஆண்டனேட் பிரியங்கா:
யார் வேண்டுமென்றா லும் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம். அவர்களை எதிர்த்து யாரும் கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்றால், குறிப்பாக சமூகத்தில் களரீதியாக போராடும் பெண்களுக்கு எந்த பாதுகாப் பும் இருக்காது. ஒருவருடைய கண்ணியத்தை கூறுபோடும் பேச் சுக்கு, சிவில் நீதிமன்றத்தில்தான் பரிகாரம் தேட முடியும் என்றால், 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் அந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட நபருக்கு கண்டிப்பாக தீர்வாக அமையாது.
கிரிமினல் சட்டங்கள் இருக் கும்போதே, அதையும் மீறி இணை யங்களில் உள்நோக்கத்துடன் அவ தூறு பரப்புகின்றனர். அடிப்படை உரிமைகள் யாரையும் மனதளவில் காயப்படுத்த கொடுக்கப்பட்டவை அல்ல. அதன்படிதான் இந்த சட்டப் பிரிவுகளை எந்த காலகட்டத்திலும் நீக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை தந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago