சென்னை: தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்று அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் நடைபெற்றது. வாடிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து என்று பதிவிட்டு இருந்தார்.
அமைச்சரின் ட்விட்டரை பகிர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்று பதிவிட்டிருந்தார். அத்துடன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் 'தமிழணங்கே' என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாய் என்று ஒரு ஓவியத்தை பதிவிட்டார்.
» கிருஷ்ணகிரி அருகே மாணவர்களிடையே மோதல்: பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து
» ரூ.5800 கோடியில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: கையெழுத்தானது புரிந்துணர்வு ஒப்பந்தம்
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே pic.twitter.com/blg72my7yX
— K.Annamalai (@annamalai_k) May 15, 2022
இந்நிலையில் அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார். pic.twitter.com/XjtVP1nGKq
— Thangam Thenarasu (@TThenarasu) May 16, 2022
அதில் "தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்." என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago