இந்து தமிழ் திசை: பெருந்துறை நிவேதா கலைக் கழகம் சார்பில் அலங்கார மலர் செய்யும் ஓரிகாமி பயிற்சி | மே 20, 21, 22-ல் ஆன்லைனில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை, கைவினைக் கழகம் இணைந்து நடத்தும் அலங்காரப் பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கோடை விடுமுறையில் வீட்டில்இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கு 3 நாட்கள் நடத்தப்படுகிறது. வரும் 20, 21, 22-ம் தேதிகளில் தினமும் மாலை 6 மணிமுதல் 7 மணி வரை இந்த பயிலரங்கு நடக்க உள்ளது. 3-ம் வகுப்பு முதல், பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்கலாம்.

இப்பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகள் கற்றுத்தரப்பட உள்ளன. உள்அலங்காரங்கள் செய்ய இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் பங்கேற்கும்போது, போதுமான இடவசதியுடன், நல்ல வெளிச்சம் உள்ள மேஜையில் அமர்ந்திருக்க வேண்டியது அவசியம்.

இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00547 என்ற லிங்க்கில் ரூ.353 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்றசெல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE