பெயர் மாற்ற தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் அறிவுரை: அமைச்சர் கே.என்.நேரு

By செய்திப்பிரிவு

திருச்சியில் நேற்று மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவாரூர் தெற்கு வீதிக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டினால், திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் இயங்க முடியாத வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு “என்ன செய்வார்கள்?. கை, கால்களைக் கட்டிவிடுவார்களா?. திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெயர் மாற்ற தீர்மானத்தை நிறுத்தி வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார். இன்றும் பழைய பெயரில்தான் அந்த வீதி உள்ளது. ஏதாவது காரணம் கிடைக்காதா என்று பாஜகவினர் அலைகின்றனர். எந்தத் தனிநபரும் அரசை, அரசுப் பணியை, அரசு அலுவலர்கள் பணி செய்வதை நிறுத்த முடியுமா? அப்படி செய்தால் அதற்குரிய வழக்குகளை அவர்கள் சந்திக்க நேரிடும்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்