மதுரை மாநகரில் இயக்கப்படும் மகளிர் இலவச பேருந்து முறையான பராமரிப்பின்றி அடிக்கடி பழுதடைவதால், நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திமுக கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றியது. இதன்படி நகர் பகுதிகளில் இயக்கப்படும் குறிப்பிட்ட சில பேருந்துகள் மட்டும் பெண்களுக்கான கட்டண மில்லா பேருந்து என்ற அறிவிப் புடன் இயக்கப்படுகிறது.இந்த பேருந்துகள் பெரும்பாலும் மிக வும் பழையனவாகவும், முறை யான பராமரிப்பின்றியும் உள்ளன.
மதுரை மாநகரில் இயக்கப் படும் மகளிர் இலவச பேருந்துகள் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நின்று விடுகின்றன. இதனால் பெண்கள் பாதி வழியில் இறக்கி விடப்படுகின்றனர். இவர்களை மாற்றுப்பேருந்தில் ஏற்றிவிட முடியாமல் நடத்துநர்கள் சிரமப் படுகின்றனர். அடுத்த இலவச பேருந்து வரும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
கடும் வெயிலில் காத்திருக்கும் பெண்கள் பொறுமை இழந்து, ஆட்டோ மற்றும் கட்டணப் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், அரசின் நலத் திட்டத்தில் பெண்கள் முழுமையாக பயன்பெற முடியாத நிலை உள்ளது.
சமீபத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் நிலையத்துக்கு இயக்கப் பட்ட நகரப் பேருந்து, திடீரென பழுதடைந்து ஏவி மேம்பாலத்தில் நின்றுவிட்டது. அதில் பயணம் செய்த பெண்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.
இதுகுறித்து வாடிப்பட்டியைச் சேர்ந்த சுபலெட்சுமி கூறியதாவது: ஏவி மேம்பாலத்தில் இலவச பேருந்து சென்றுபோது, அதன் டயர் வெடித்து பழுதாகி நின்றுவிட்டது. அதில் பயணம் செய்த பெண்களை மற்ற பேருந்துகளில் ஏற்றிவிட ஓட்டுநர், நடத்துநர் முயற்சித்தும் யாரும் நிறுத்தவில்லை. நீண்ட நேரத்துக்குப் பின்பு அடுத்து வந்த கட்டணமில்லா பேருந் தில் ஏற்றிவிட்டனர். பெண் களுக்கு இலவச பயணம் என்பதால் தரமில்லாத, பழு தான பேருந்துகளையே இயக்கு கின்றனர். இதனை மாற்றி தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago