செய்யாறு அடுத்த மடிப்பாக்கத்தில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மடிப்பாக் கத்தில் 10-ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டெ டுக்கப்பட்டுள்ளதாக திருவண் ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செய்யாறு அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் பாறையில் அரசன் பார்த்திவேந்திரவர்மனின் 10-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. பார்த்தி வேந்திர வர்மனின் 3-வது ஆட்சியில் காலியூர் கோட்டையைச் சேர்ந்த காழியூர் நாட்டு மடிப்பாக்கத்து மகாதேவரான சிவனுக்கு இரண்டு வேளையும் பலி பூஜை செய்யப் படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பலி என்பது கோயிலை சுற்றி வந்து திக்குகளில் படையல் வைக்கும் போது தோல் கருவியை கொண்டு இசைப்பதை குறிப்பிடுகிறது. பலி ஏற்பாடுகளை தென்வீதி விடங்கனான் வானவன் மாராயனேன் செய்ததாக குறிப் பிடப்பட்டுள்ளது. மாராயனேன் என்பது இசை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் பட்டம் என கல்வெட்டில் குறிப்பிடுவதாக கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் கூறுகிறார்.

கோயிலில் உள்ள மற்றொரு பாறை கல்வெட்டில், கோயிலில் தொடர்ந்து வழிபாடு செய்ய நந்தவனம் ஏற்படுத்தப்பட்டு, அதனை பராமரிக்க நிலம் வழங்கப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு உடைந்துள்ளதால், அதன் முழு விவரத்தை அறிய முடியவில்லை.

இவ்விரு கல்வெட்டுகளில் தர்மத்தை காப்பவர்களின் பாதத்தை தன் தலைமேல் வைத்து போற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்