சென்னை: ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மே 28-ம் தே திகுடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கருணாநிதி சிலை அமைக்கப்படுகிறது.
இந்த சிலையின் திறப்பு விழா, வரும் 28-ம் தேதி நடக்கிறது. விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறக்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago