மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பாடசாலை தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் கபிலன்(22), தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கபிலன் நேற்று காலை திருக்கழுக்குன்றம் பகுதியிலிருந்து செங்கல்பட்டு நோக்கி காரை ஓட்டிச் சென்றார்.
கீரப்பாக்கம் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே செங்கல்பட்டு பகுதியிலிருந்து கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிச் சென்ற கபிலன் உயிரிழந்தார்.
திருக்கழுக்குன்றம் போலீஸார், தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று, கபிலனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த கபிலன் திருக்கழுக்குன்றம் திமுகவின் வடக்கு ஒன்றியச் செயலாளர் தமிழ்மணியின் உறவினர் என்பதால், சம்பவ இடத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago