திருவண்ணாமலை: பள்ளிக்கு வகுப்பறைகள் கேட்டு ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் வழூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த ஒரு வகுப்பறை கட்டிடத்தை இடிக்கும் போது, மற்றொரு வகுப்பறை கட்டிடத்தையும் சேர்த்து இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வகுப்பறை இல்லாததால், கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா பொன்னன் தலைமையில் வழுர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் கூறும்போது, “வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு தொடங்குவதற்குள் வகுப்பறைகளை கட்டிக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்” என்றனர். இதில், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்