மீனவர் கைது விவகாரம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள விவ காரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

அவர் பிரதமருக்கு ஞாயிற்றுக் கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

மீன்பிடி தடைக்காலமான 45 நாட்களுக்கு பிறகு ஜூன் 1-ம்தேதி மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற் படை கைது செய்துள்ளது. அவர் களது 7 படகுகளையும் கைப்பற்றி உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 76 முறை கைது செய்யப்பட்டுள்ளனர். 67 முறை தாக்கப்பட்டுள்ளனர். இதன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முந்தைய பிரத மருக்கு நான் எண்ணற்ற முறை கடிதங்கள் எழுதி உள்ளேன். ஆனால் பயனில்லை. இந்த கைது சம்பவம் தமிழகத்தின் மீனவ சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளது.

பாரம்பரியமாகவும் வரலாறு ரீதியாகவும் உரிமை உள்ள கடல் பகுதியில் நமது மீனவர்கள் மீன்பிடிப்பதும் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கான உரிமையும் இலங்கை அரசால் மறுக்கப் படுகிறது. எந்தவித சர்ச்சைக்கும் இடமில்லாத வகையிலும் இந்தி யாவின் பகுதியாக இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்து தந்த தவறான ஒப்பந்தமே இத் தகைய நிலைக்கு காரணம்.

இந்த நிலையிலும் இரு நாட்டு மீனவர்களின் மட்டத்தில் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக தமிழக அரசு ஏற்பாடுகளை செய் தது. 2 முறை பேச்சு வார்த்தை கள் நடந்தன. இந்த பேச்சு வார்த் தைகளில் தமிழக அரசு மிகவும் நேர்மறை அணுகுமுறையோடு நடந்து கொண்டாலும் இலங்கை அரசின் அணுகுமுறை அவ்வாறு இல்லை. தற்போது மீண்டும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலவீனமான செயல்பாடுகளால் இலங்கையின் கடற்படை தைரியத்துடன் அப்பாவி மீனவர்களை தாக்கிவந்தது. தங் களின் தலைமையிலான மத்திய அரசில் தமிழக மீனவர்களின் பிரச் சினையை கையாளுவதில் ஒரு தீர்மானகரமான மாற்றம் இருக் கும் என நம்புகிறேன்.

இலங்கை கடற்படையின் திட்ட மிட்ட இந்த வன்முறை தாக்குதல் களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இலங்கை அரசின் இத்தகைய செயல்களை இந்திய அரசு சகித் துக்கொள்ளாது என்பதை தெரி விக்கும் வகையிலும் நீங்கள் வலு வான ராஜதந்திரரீதியான எதிர்ப்பை காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடை பிடித்த செயலற்று போன கொள் கைகளுக்கு மாறானதாக அது இருக்க வேண்டும். புதிதாக வந் துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மீது பெரிய அளவிலான எதிர்பார்ப்பு தமிழகத்தில் உள்ளது. தனிப்பட்ட முறையிலான தங்களின் தலையீட்டை நான் எதிர் பார்க்கிறேன்.

நமது வெளியுறவுத் துறை இலங்கை அரசோடு பேசி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக 33 மீனவர் களையும் அவர்களது 7 படகு களையும் விடுவிக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்