விழுப்புரம்: செஞ்சி அருகே பாக்கம் - கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம் -கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள், அழிந்து வரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எரும்பு தின்னி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள்,தேரைகள் உள்ளதாக உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
இந்த அமைப்பைச் சேர்ந்த ஆர். ராமன், எஸ். விமல்ராஜ் ஆகியோர் செஞ்சி அருகே பாக்கம்மலைகளில் கடந்த 8 மாதங்களாக வன உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுஅவர்கள் அரியவகை சிலந்தி பூச்சியை கண்டறிந்தனர். மேலும் இக்குழுவினர் சானிவீரன், மலைபூவரசு போன்ற 21 வகை செடிகள், மரங்கள், மூங்கில் குழி விரியன் என்கிற அரியவகை பாம்பு உள்ளிட்டவற்றை கண்டறிந்துள்ளனர். 2019-ம் ஆண்டு இப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வன அலுவலர்சுமேஷ் தோமரிடம் கேட்டபோது, “பாக்கம் மலைப்பகுதியில் வன விலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து அரசுக்கு ஏற்கெனவே திட்டமதிப்பீடு அனுப்பபட்டுள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ளவனதுர்க்கையம்மன் கோயிலுக்கு பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுஉள்ளது. மாலை 6 மணிக்கு மேல் கோயிலில் யாரும் தங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தற்போது சில தொழில்நுட்ப தகவல்களை அரசு கேட்டுள்ளது. அவற்றையும் அனுப்பிஉள்ளோம்” என்றார். எனவே, விழுப்புரம் மாவட்டம், பாக்கம் - கெங்கவரம் காப்புக்காடு பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைய உள்ளது உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago