சென்னை: பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளைக் களைய தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக உயர்ந்த நோக்கத்துடன் பச்சையப்பர் உருவாக்கிய அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஆறு கலைக் கல்லூரிகள் உட்பட பல கல்வி நிலையங்கள் தொடர்ந்து சீரழிவுக்குள்ளாகி வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்.
அறக்கட்டளைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பணிக் காலம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதமே நிறைவு பெற்றுவிட்டது. இதற்குப் பின் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சொத்தாட்சியர், அறக்கட்டளை செயலர் ஆகியோர் பொறுப்பில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 10 வாரங்களுக்குள் அறங்காவலர் குழு தேர்தலை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என சொத்தாட்சியருக்கு கட்டளைப் பிறப்பித்திருந்தது. இந்த காலக்கெடு முடிந்து பல மாதங்கள் கடந்த பிறகும் தேர்தல் நடத்தப்படவில்லை.
நிர்வாகத்தின் தவறான போக்கை எதிர்க்கும் பேராசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத அலுவலர்களையும் பணி இடமாற்றம் செய்ததோடு, பல மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் பழிவாங்கும் போக்கில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 2014-ம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் அனைவருக்கும் தமிழக அரசு வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, பணி மேம்பாட்டுக் கோப்புகள் தயாரிக்கப்பட்டு செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அரசுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
சொத்தாட்சியர், செயலர் ஆகியோரின் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராக ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மாணவர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு, அறங்காவலர் குழுவின் தேர்தல் நடத்தப்படும் வரை, சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் நலன்களைக் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago