சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பார்ப்பு இல்லாத அன்பும், பாசாங்கு இல்லாத பாசமும் கொண்டதுதான் தாய்மை என்றும், 'அம்மா' என்று சொன்னாலே அனைவரின் மனக்கண்ணிலும் அவரது உருவமே தோன்றுகிற அளவுக்கு இடம்பிடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தியாகத்தின் திருஉருவமாக, தாய்மை எனும் பெருங்குணத்தோடு அன்பு காட்டுகிற அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எதிர்பார்ப்பு இல்லாத அன்பும், பாசாங்கு இல்லாத பாசமும் கொண்டதுதான் தாய்மை.
அத்தகைய தாய்மையோடு மறைந்தும் மறையாது தமிழக மக்களின் மனங்களில் வாழ்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 'அம்மா' என்று சொன்னாலே அனைவரின் மனக்கண்ணிலும் அவரது உருவமே தோன்றுகிற அளவுக்கு இடம்பிடித்தவரை இந்த நல்ல நாளில் நினைவு கூருவோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் பயணித்து, தாய்மையை எந்நாளும் மகிழ்ந்து கொண்டாடுவோம். தூய்மையான தாயுள்ளத்தோடு நம்மிடம் அன்பு காட்டி, ஆசிர்வதிக்கும் அனைவரையும் போற்றி வணங்கிடுவோம்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago