பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் - அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேரவையில் நேற்று அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் தந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பின்னர் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசியதாவது:

பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநில அரசு, புதிய ஓய்வுதிய திட்டத்துக்கு மாறிய பின், பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற இருப்பதாகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட நிதியை அளிக்குமாறு மத்திய அரசிடம் ராஜஸ்தான் அரசு கேட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு, அந்த நிதியை திருப்பித்தர இயலாது என ஒரு விளக்க கடிதத்தை ராஜஸ்தான் அரசுக்கு அனுப்பியுள்ளது.

2003-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்ட நிதி முழுமையாக அரசின் கணக்கில் இருந்தது. அதை அரசு எடுக்கலாம், வைக்கலாம், அனைத்து உரிமையும் அரசிடம் இருந்தது. ஆனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு மாறிய பின்னர், ஒவ்வொரு தனி நபரின் பணம், அரசு அளிக்கும் பங்களிப்பு ஆகியவை ஒவ்வொரு தனி நபரின் பெயரில் தனியாக கணக்கில் வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் 2016-ல் ஒரு ஆய்வு குழுவை அமைத்து, 2018-ல் அறிக்கையும் பெற்றுள்ளனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தனிகணக்கில் வரவு வைத்த பிறகு, அதை திரும்ப எடுத்து அரசு நிதியாக்குவதற்கு சட்டம் அனுமதிக்காது. இது சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஓய்வூதியத்துக்காக இந்த ஆண்டு ரூ.39 ஆயிரத்து 500 கோடி செலவிடப்படுகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு சார்பில் ரூ.3 ஆயிரத்து 250 கோடி ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலவிடப்படுகிறது. 2003-க்கு முந்தைய பணியாளர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. அதாவது ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவிடப்படுகிறது. இது தான் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கும், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கும் உள்ள வித்தியாசம்.

கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூ பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த ஆண்டு ஓய்வுபெறும் நிலயைில் அவர்களுக்கு ரூ.2,150 கோடி செலவாக இருக்கிறது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ.5,200 கோடி செலவிடப்படுகிறது.

இந்த ஆண்டு, சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை ஓய்வு பெற்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்துக்காக ரூ.7 கோடி, எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்துக்காக ரூ.40 கோடி செலவிடப்பட உள்ளது. அதனால் எம்எல்ஏக்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வு குறித்து அவை முன்னவரும், முதல்வரும் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட்டவன்.

சுதந்திரத்துக்கு பிறகு, சட்டப்பேரவை, அரசு, நீதித்துறை ஆகியவற்றின் எல்லை தெளிவற்று இருக்கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பார்த்தால் அரசாங்க உரிமைகளில் கை வைக்கும் வகையில் உள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சரியான தலைமை இல்லாத ஆட்சி நடந்ததால் அதிகாரிகள் சற்று திசை திரும்பி இருக்கிறார்கள். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு மாற்றத்தை உருவாக்கி வருகிறோம். படிப்படியாகதான் அரசை திருத்த முடியும். திருத்தம் உறுதியாக நடந்து வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்