கடலூர் முதுநகர் அருகே விடுத லைச்சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், பாமகவை சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனை கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகே உள்ள கீழ்பூவாணிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அருள்ஜோதி உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் கடலூர்சென்று விட்டு ஊருக்கு திரும்பிவந்தார். கடலூர் முதுநகர் அருகேகார் சென்று கொண்டிருந்தபோது சிலர் அந்த காரின் பின்பக்க கண்ணாடியை விஷமிகள் உடைத்தனர். இதனை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீஸார், பாமக நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக பாமக நிர்வாகிகளான சேடப் பாளையம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (42), கடலூர் முதுநகர் சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (26) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் பாமக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் சண்முத்துகிருஷ்ணன் தலைமையில் நேற்று காலை கடலூர் முதுநகர் காவல் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் பாமக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது பாமகவினர் கூறுகையில், "பாமகவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
பாமக பேனர்களை கிழித்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாமக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பாமகவினர் கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனுவை பெற்றனர். இதனையடுத்து பாமகவினர் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago