10,000 மாணாக்கருக்கு ரூ.10 கோடியில் பயிற்சிகள், நிலம் வாங்க மானியம்... - ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத் துறையின் 33 அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: 1000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, 10,000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை மற்றும் முதுநிலைப்பட்ட மாணாக்கருக்கு வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும், 200 நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க மானியம் வழங்குதல், அழிவின் விளிம்பில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாச்சாரங்கள் ஒலி ஒளி ஆவணமாக பதிவு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். அவர் வெளியிட்ட 33 முக்கிய அறிவிப்புகள்:

> 1000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் ரூ.23.37 கோடி செலவில் வழங்கப்படும்.

> வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் வாங்கிட மானியம் வழங்கப்படும்.

> 10,000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட மாணாக்கருக்கு வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகள் ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.

> 2,000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.50 கோடி செலவில் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.

> 200 நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க ரூ.10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.

> பழுதடைந்துள்ள 10 ஆதி திராவிடர் பள்ளி மாணாக்கர் விடுதிகளுக்கு ரூ.45.45 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.

> வாடகைக் கட்டடங்கள், பழுதடைந்த கட்டடங்களில் இயங்கி வரும் 5 ஆதி திராவிட மாணாக்கர் கல்லூரி விடுதிகளுக்கு ரூ.28.35 கோடி செலவில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.

> ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 6 மேல்நிலைப் பள்ளிகள் ரூ.16.26 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

> 11 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

> 83 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

> 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்க ரூ.2.25 கோடி மானியம் வழங்கப்படும்.

> 100 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவேருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும்.

> 50 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் மானியம் வழங்கப்படும்.

> ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

> 1000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.

> ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.

> ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்காக தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வு மூலம் ரூ.1 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும்.

> 7 மாவட்டங்களில் உள்ள 88 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய புதிய சமையலறைகள் கட்டப்படும்.

> 305 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு தேவையான அறைகலன்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ரூ.7.46 கோடி செலவில் வழங்கப்படும்.

> ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு ரூ.5.70 கோடி செலவில் கழிவறை மற்றும் குளியலறைகள் கட்டப்படும்.

> 126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும்.

> 7 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணாக்கர் விடுதிகள் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும்.

> 5 ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் கலைப் பாடப்பிரிவுகள் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் புதிதாகத் தொடங்கப்படும்.

> 104 ஆதி திராவிடர் நலவிடுதிகள் மற்றும் 128 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு ரூ.1.15 கோடி செலவில் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

> 13 மகாத்மா காந்தி தொழிலாளர்கள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டுக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் சுகாதார அங்காடிகள் அமைக்கப்படுவதற்கு ரூ.98 லட்சம் மானியம் வழங்கப்படும்.

> பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும்.

> தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் ஆகிய வாரியங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.

> 50 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் நூலகங்கள் மற்றும் இணைய வழி நூலகங்கள் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும்.

> ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணாக்கர் மற்றும் இளைஞர்களுக்கு நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

> 90 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.

> ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் ஆண்டிற்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும்.

> 20 ஆதி திராவிடர் நல கல்லூரி விடுதிகள் மற்றும் 2 பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும்.

> அழிவின் விளிம்பில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாச்சாரங்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஒலி ஒளி ஆவணமாக பதிவு செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்