ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பும்போது ரூ.5 லட்சம் மாயம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பும் போதுரூ.5 லட்சம் பணம் மாயமானதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான ரவிச்சந்திரன், மோகன்குமார் ஆகியோர் கடந்த மாதம் 25-ம் தேதி திருவள்ளூர் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்புவதற்காக, திருவள்ளூரில் உள்ள அரசு வங்கிக் கிளை ஒன்றிலிருந்து ரூ.95 லட்சத்தை எடுத்துக்கொண்டு வாகனத்தில் சென்றனர்.

அவர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பிய பிறகு இருப்பு பணத்தை சரிபார்த்தனர். அப்போது ரூ.5 லட்சம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. ரவிச்சந்திரன், நிறுவன மேலாளர் பிரேம்நாத் அளித்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்