தமிழகத்தில் முதல்முறையாக சிறை வாசிகளின் வழக்குகளை விசாரிப் பதற்காக உயர் நீதிமன்றத்திலும், அதன் கிளையிலும் வரும் 17 முதல் 27-ம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம் நடைபெறுகிறது.
டெல்லியில் கடந்த ஏப்ரல் 25-ல் நடந்த மாநில முதல்வர் கள், தலைமை நீதிபதிகள் மாநாட் டில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தாக்கூர் பங்கேற் றனர். அப்போது மாநாட்டில் பேசிய தலைமை நீதிபதி தாக்கூர், “நாடு முழுவதும் 3 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. நீதிபதி பணியிடங் கள் காலியாக இருப்பதால் நீதித் துறை திணறி வருகிறது. இதனால் நீதி கிடைக்காமல் விசாரணை நிலையிலேயே அப்பாவி மக்கள் சிறைகளில் வாடி வருகின்றனர், சிறைகள் நிரம்பி வழிகின்றன” என்று கூறி அழுதார்.
இதைத் தொடர்ந்து வழக்கமாக கோடை விடுமுறையின்போது நடை பெறும் விடுமுறை கால நீதிமன்றம் தவிர்த்து, சிறைக் கைதிகளின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நடத்துமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் மாத இறுதியில் சுற்றறிக்கை அனுப்பியது.
அதன்பேரில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் மே 17, 18, 23, 24, 27 ஆகிய 5 நாள் சிறப்பு நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு நீதிமன்றத்தில் குண்டர் சட்டத்தை எதிர்த்து கைதி கள், அவர்களது உறவினர்கள் தாக் கல் செய்த ஆட்கொணர்வு மனுக் கள், ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடு மனுக் கள், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை இடை மனுக் கள் விசாரிக்கப்படுகின்றன.
பட்டியலில் 630 மனுக்கள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் முடிய தாக்கலான 400 மனுக்கள், மதுரை கிளையில் மார்ச் மாதம் முடிய 230 மனுக்கள் என மொத்தம் 630 மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட் டுள்ளன. இவற்றில் 450 மனுக்கள் குண்டர் சட்ட கைதுக்கு எதிரான ஆட்கொணர்வு மனுக்களாகும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மே 17, 18-ல் நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.கல் யாணசுந்தரம், டி.கிருஷ்ணகுமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் வழக்கு களை விசாரிப்பர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் விசாரணை செய்வர்.
சென்னையில் மே 23, 24, 27-ல் நீதிபதிகள் ஜி.சொக்கலிங்கம், எம்.வி.முரளிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் வழக்குகளை விசா ரணை செய்வார்கள். மதுரையில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரிப் பர். இவர்கள் முதல் அமர்வில் ஆட்கொணர்வு, ஆயுள் தண்ட னையை எதிர்த்து தாக்கலான மேல் முறையீடு மனுக்களையும், பின்னர் தனியாக 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரும் மேல்முறையீடு மனுக் களையும் விசாரணை செய்வார்கள்.
தமிழகத்தில் சிறைவாசிகளின் வழக்குகளுக்காக சிறப்பு நீதி மன்றம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இது குறித்து வழக்கறிஞர் ஆர்.அழகுமணி, ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட 9 மத்திய சிறைகளிலும், 3 பெண்கள் சிறையிலும் குண்டர் சட்டத்தில் கைதானவர்கள், குற்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள், 10 ஆண்டு, அதற்கு குறைவாக தண்டனை பெற்றவர் கள் என பல ஆயிரம் கைதிகள் உள்ளனர். இவர்கள் தங்களின் விடுதலைக்காக உயர் நீதிமன்றத் தில் மனு செய்து காத்திருக்கின்றனர். சிறைவாசிகளின் நலனுக்காக அவர்களின் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்தது வரவேற்புக்குரியது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago