சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான கோடை விடுமுறை குறித்த தகவல் பள்ளிகளுக்குமுறையாகத் தெரிவிக்கப்படாததால், சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு மே 5 முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்படும். பள்ளி கடைசி வேலைநாளாக மே 13-ம் தேதி கணக்கில் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதற்கேற்ப, அந்தந்த மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் ஆண்டு இறுதித்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதற்கிடையில், கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. அதை ஏற்றும், வெயில் தாக்கத்தைக் கருத்தில் கொண்டும் மாணவர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வு தினத்தன்று மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அறிவித்தார்.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் பள்ளிகளுக்குமுறையாகத் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்வது தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுவதாகப் புகார்கள் எழுந்தன.
மேலும், வெயில் அதிகம் நிலவிய பகல் நேரங்களில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டதால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, "விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று காலைதான் எங்களுக்குக் கிடைத்தது. அந்த தகவலை பெற்றோருக்கு உடனடியாகத் தெரிவிக்க முடியவில்லை. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்துவிட்டனர்.
அவர்களில், முழு ஆண்டுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களைத் தவிர்த்து, மற்றவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அமைச்சர் அறிவிப்பை கவனித்த சில பெற்றோர் மட்டுமே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவில்லை’’ என்றனர்.
இதுதவிர, அரசின் அறிவிப்புக்கு மாறாக, தனியார் பள்ளிகளில் வழக்கம்போல முழுநேர வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசின் அறிவிப்புக்கு மாறாக, தனியார் பள்ளிகளில் வழக்கம்போல முழுநேர வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago