சென்னை: வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கர்நாடக மாநிலம் மங்ளூருவில் உள்ள சிவர்மா காரந்த் பிலிகுலா உயிரியல் பூங்கா இடையே விலங்குகள் பரிமாற்றத் திட்டத்துக்கு புது டெல்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்து இருந்தது.அதன்படி இரு உயிரியல் பூங்காக்களும் கடந்த மே 1-ம் தேதி முதல்5-ம் தேதி வரை விலங்குகள் பரிமாற்ற பணிகளை மேற்கொண்டன.
வண்டலூர் பூங்காவில் இருந்துஒரு பெண் வெள்ளை புலி மற்றும்ஒரு பெண் நெருப்புக் கோழி ஆகியவற்றை, கால்நடை மருத்துவர்கள், உயிரியல் ஆர்வலர்கள், சீருடை பணியாளர்கள் அடங்கிய குழுவுடன் மங்களூரு பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பூங்காவில் இருந்து 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்புகள் மற்றும் ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு ஆகிய விலங்குகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.
இப்பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட 11 விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்த பிறகு, கால்நடை மருத்துவர்களின் மருத்துவ சான்றின்படி விலங்குகள் இருப்பிடத்துக்கு மாற்றப்பட்டு, பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago