சென்னை: வரும் 8ம் தேதி நடைபெற உள்ள சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் எந்த வகையில் நடத்தப்படவுள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் பொதுத் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் வரும் 8-ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநயாகம் அளித்த விளக்கத்தில்,"
தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளமால் உள்ளனர். இதனால் தொற்று மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2வது டோஸ் செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் அளித்து இந்த முகாம் நடைபெற உள்ளது. இன்றைய தேதியில் கிராம் வாரியாக 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்களின் பட்டியல் பொதுசுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
» இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி: முதல்வரிடம் வழங்கினார் வைகோ
» நீட் விலக்கு சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதலை 3 மாதங்களில் பெற வேண்டும்: ராமதாஸ்
இதில் தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்களின் பெயர்,அடையாள எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் எடுத்த நாள், 2 வது டோஸ் எடுக்க வேண்டிய நாள், முதல் டோஸ் செலுத்தி எத்தனை நாட்கள் ஆகி உள்ளது என்ற அனைத்து தகவலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். தேவைபட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் கூட அமைக்கப்படும். அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அடுத்த அலையில் வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.
வீடியோவை " target="_blank">காண
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago