1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கோடை வெயில் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்று (மே 5) தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 9-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மே 2 முதல் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

ஆண்டு இறுதித் தேர்வுக்கான வினாத்தாள்கள் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவிலும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு மாவட்ட அளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: கரோனா பரவலால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய, மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது அவசியமாகும்.

எனவே, 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும். அதேநேரம், கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு, மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

குழப்பத்தை ஏற்படுத்திய அறிவிப்பு

அதேநேரம், அமைச்சரின் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த ஆண்டு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் முழு அளவில் இயங்க வேண்டும். இன்னும் 8 வேலை நாட்களே மீதம் உள்ளன. அதில் 6 நாட்கள் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும். தற்போதைய 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு என்பது, சத்துணவு உட்பட பல்வேறு அலுவல் செயல்பாடுகளில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.

மேலும், மாணவர்கள் வெயில் அதிகம் தகிக்கும் பகல் நேரங்களில் வெளியில் நடமாட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்