தாம்பரத்தை இரண்டாக பிரித்து பல்லாவரத்தில் மின்கோட்டம் விரைவில் உருவாக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தாம்பரம் மின் கோட்டம் பெரியதாக இருப்பதால், அதை இரண்டாக பிரித்து பல்லாவரம் மின்கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தில், பல்லாவரம் உறுப்பினர் இ.கருணாநிதி பேசும்போது,“அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுியதாவது: தமிழகத்தில் 100 துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்தினாபுரத்தில் 33 கேவி புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் ையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் பணிகள் முடிந்ததும் துணை மின் நிலையம் அமைக்கப்படும். கடந்த ஓராண்டில் 47 துணை மின்நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தாம்பரம் மின்கோட்டம் 6.65 லட்சம் நுகர்வோருடன் மிகப்பெரிய கோட்டமாக உள்ளது. இதனை இரண்டாக பிரித்து பல்லாவரத்தில் புதிய மின்கோட்டம் உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், பல்லாவரம் மின் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். இவ்வாறு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்