திருப்பத்தூரில் நாளை தனியார் துறை சார்பில்: வேலை வாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை (6-ம் தேதி) சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலர்களுக்கான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

அதன் அடிப்படையில் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

எனவே, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, டிப்ளமோ முடித்தோர், வேலை தேடுவோர் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான வேலையை தேர்வு செய்துகொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்