திருக்கோயில்களின் அசையா சொத்துக்களின் மூலம் ரூ.151.65 கோடி குத்தகை வருமானம்: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் மூலம் 2021 ஜூலை 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரை ரூ.151.65 கோடி குத்தகை வருமாமானம் ஈட்டப் பெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக இன்று காலை பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்துசமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இந்து சமய அறநிறுவனங்களின் அசையா சொத்துக்களின் நிருவாகம் தொடர்பாக வெளியிடப்பட்டுல்ள தகவல்கள்:

> இந்துசமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நில விவரங்கள் வருவாய்த்துறையின் "தமிழ்நிலம்" வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவுகளோடு ஒப்பிடுதல் மற்றும் சரிபார்த்தல் பணியானது தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

> அதில் மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில், 3.43 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் வருவாய்த்துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் இனங்கள் (Fully matched items) என உறுதி செய்யப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரால் கடந்த 6.9.2021 என்று இத்துறையின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

> நிலவிவரங்கள் ஒப்புநோக்கும் பணியில் பகுதியாக ஒத்துப்போகும் (Partially matched) நிலங்கல் குறித்தும், அதுபோல தமிழ்நிலப் பதிவில் இல்லாத புதிய இனங்கள் குறித்தும் தொடர்புடைய சமய நிறுவனங்களால் முழுமையாக ஒத்துப்போகும் இனங்களாக மாற்றுவதற்கு வருவாய்த துறையின் தகுதியான அலுவலர் முன் மேல்முறையீடடு செய்யப்பட்டு வருகிறது.

> இந்துசமய அறநிலையத்துறையின் நிலங்கள் தொடர்பான தரவுத் தளத்துடன் (Data base) வருவாய்த் துறையின் "தமிழ் நிலம்" வலைதளத்துடன் ஒப்பு நோக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஒப்புநோக்குதல் மூலமாக அறியப்படும் விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை தரவுத்தளத்தில் சரிபார்த்துப் பதிவேற்றப்படும்.

> இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இத்துறையின் ஒவ்வொரு உதவி ஆணையர் பிரிவிலும் ஒரு தனி வட்டாட்சியர் வீதம் 36 தனி வட்டாட்சியர்களும் மற்றும் தலைமையிடத்தில் இரு தனி வட்டாட்சியர்களும் இப்பணிக்காக வருவாய்த்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

> இந்து சமய அறநிறுவனங்களுக்குச் சொந்தமான 22,600 கட்டடங்களும், 33,665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

> விவசாய நிலங்கள் 1,23,729 நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த 1.7.2021 முதல் 31.3.2022 வரையிலான காலத்திற்கு மட்டும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான மேற்கண்ட அசையாச் சொத்துக்களிலிருந்து ரூபாய் 151.65 கோடி குத்தகை வருமானம் ஈட்டப் பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்