ஈரோடு: ‘தமிழக காவல்துறையில் அரசியல் தலையீடு உள்ளது. சுதந்திரமாகச் செயல்படவில்லை' என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
ஈரோடு மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என நிதியமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் நிலக்கரி, மின்சாரம் போன்றவற்றிற்கு தமிழகம் எவ்வளவு தொகை பாக்கி வைத்துள்ளது என்பதையும் அமைச்சர் விளக்க வேண்டும். திராவிட மாடல் என்று கூறி தமிழகத்தை சீரழித்துள்ளனர்.
பாஜக தமிழை மிக உயர்வாக மதிக்கிறது.
பஞ்சு விலை உயர்ந்ததால், நூல் விலை உயர்ந்தது . பஞ்சு விலையைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இன்னும் 45 நாட்களுக்குள் இறக்குமதி அதிகரித்து, நூல் விலை குறையும்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு, சிமென்ட் விலை உயர்வு, கேரளாவுக்கு அரிசி கடத்தல், காவல்துறையில் அரசியல் தலையீடு போன்றவை தொடங்கி விடும். தற்போது, காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறி உள்ளது. தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. இலங்கைத் தமிழர் நலனில் பாஜக அக்கறை கொண்டுள்ளது. கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கையாகும், என்றார்.
பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி, புதிய மாவட்டத் தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago