சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிஇருப்பதாவது: ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு பெரும் கொடுமைகள் செய்திருந்தபோதும், அவற்றை எல்லாம்மறந்து, அந்நாடு பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலையில் மனிதாபிமானத்துடன் உதவி வருகிறோம்.
இருநாடுகளின் நல்லுறவை கெடுத்து வரும் கச்சத்தீவு பிரச்சினையில் தலையிட்டு, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு முன்னின்று முயற்சிக்க வேண்டும். இதைவலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்கும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் துயரத்தில் பரிதவிக்கும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள அரசால் ஏற்பட்ட இன அழிவை மறந்து மத்தியஅரசும், தமிழக அரசும் நேசக்கரம் நீட்டுகிறது. இந்த நிலையில்கூட, இலங்கை தேசிய கீதத்தில் இருந்து தமிழை விலக்கி இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக அரசும் மத்திய அரசும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago