வறுமை காரணமாக குவைத்தில் வீட்டு வேலைக்கு சென்று சிக்கிய பெண் 5 நாட்களில் மீட்பு: தாம்பரம் ஆணையரக போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தாம்பரம்: சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், லட்சுமண் நகரைச் சேர்ந்தவர் வனஜா(58). இவரது மகள் மஞ்சுளா(38). இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கணவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவை விட்டுபிரிந்து சென்றுவிட்டார். இதுநாள்வரை தாயின் பராமரிப்பில் இருந்து வந்த மஞ்சுளா, குடும்பவறுமையின் காரணமாக வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த பாஷா என்பவர் நடத்திய டிராவல் ஏஜென்சி மூலம் குவைத் நாட்டுக்கு வேலைக்காக ரூ.60,000 பணம் கொடுத்து கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி சென்றுள்ளார்.

வீட்டு வேலைக்காக சென்றஇவரை அந்த வீட்டின் உரிமையாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனஜாவுக்கு வாட்ஸ் -அப் வாயிலாக மஞ்சுளா தகவல் அளித்தார். உடனே, தாம்பரம் ஆணையர் அலுவலகத்தில் மகளைமீட்கக் கோரி வனஜா புகார் அளித்தார்.

அதன்பேரில் பல்லாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏஜென்ட் பாஷா(31), சர்தார்(50) ஆகியோரை 28-ம் தேதி பிடித்து வந்து விசாரணை செய்து, குவைத்தில் சிக்கியிருந்த மஞ்சுளாவை மீட்டுதமிழகம் வர ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து தாம்பரம் ஆணையர் ரவி கூறும்போது, “வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் நிறைய பெண்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். சரியாக விசாரிக்காமல் யாரும் செல்லக் கூடாது. தாய் ஒருவர் கண்ணீர் மல்க கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் ஆணையரக போலீஸார் இப்பெண்ணை உடனடியாக மீட்டுஉள்ளனர். போலீஸாரின் முயற்சியால் 5 நாட்களில் அவர் நாடுதிரும்பியுள்ளார். இது போன்ற நிகழ்வுகளை வரும் காலங்களில் தவிர்க்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்” என்றார்.

மேலும், பெண்ணை மீட்க உதவிய பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன், ஆய்வாளர் தயாள், நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் டொமினிக் ராஜ் ஆகியோரை ஆணையர் ரவி பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்