சென்னை: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 2-வது முறையாக 17 வயது சிறுவனுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனத்தைச் சேர்ந்த தண்டபானி - சத்யா தம்பதியின் மகள் நந்தன். 17 வயதான இவர் சிறு வயது முதல் இதய நோய் பாதிப்பால் சிரமப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பிறகு அந்த சிறுவன் Attention Deficit – Hyperactivity Disorder (ADHD) என்று அழைக்கப்படும் சிக்கலான நரம்பியல் வளர்ச்சித் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். சிறுவனின் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கியது என்பதால் பள்ளி சுகாதார திட்டம் சார்பில் அந்தச் சிறுவனுக்கு சோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் கரோனா காலத்தில் அந்த சிறுவன் வழக்கமான சோதனைக்கு வந்தபோது, மீணடும் ஒரு இதய அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் அந்த சிறுவனின் இதயம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை செலவு ஆகும் என்பதால் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.
இது தொடர்பாக விழுப்புரம் துணை இயக்குனர் பொது சுகாதராத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சுகாதாரத்துறையின் முயற்சியால் தேசிய நல வாழ்வு திட்டம் நிதியின் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அந்த சிறுவனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அந்தச் சிறுவன் நலமுடன் உள்ளதாகவும், பள்ளி சுகாதார திட்ட குழு தொடர்ந்து அந்த சிறுவனின் உடல் நிலையை கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக முதல் காப்பீட்டு திட்டத்தில் இதய அறுவை சிகிச்சை செய்வது இது 2-வது முறை என்று பொதுத் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago