சென்னை: வணிகர் தினத்தையொட்டி மே 5-ம் தேதி காலை வேளை மட்டும் சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டு மே 5-ம் தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு சென்னையில் உள்ள உணவகங்களுக்கும் மே 5-ம் தேதி காலை ஒரு வேளை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், மே 5ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைத்து, இந்த மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும், வணிக சகோதரத்துவத்தை நிலை நாட்டவும், மே 5-ம் தேதி உணவகங்களுக்கு விடுமுறை அளித்திட கோரிக்கை வைத்தார். அதையேற்ற உணவங்களுக்கு காலை ஒரு வேளை விடுமுறை அளித்து வணிக ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago