சென்னை: வண்டலூர் உயிரியில் பூங்காவில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்ட்ட வெள்ளைப்புலி அதன் பராமரிப்பாளரை தாக்கியது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் எண்ணற்ற விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு அரிய வகை உயிரினமான "நகுலன்" என்ற வெள்ளைப் புலியும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ளைப் புலிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக வெள்ளைப் புலி கூண்டில் அடைக்கப்பட்டது.
சிகிச்சையளிக்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பணியில் வெள்ளைப் புலியின் பராமரிப்பாளரான செல்லையா என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென ஆக்ரோஷமடைந்த வெள்ளைப் புலி பராமரிப்பாளரை தாக்கியது.
இந்த சம்பம் குறித்து, பூங்கா நிர்வாகம், வெள்ளைப் புலி தாக்கியதில் பராமரிப்பாளர் செல்லையாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பி விட்டதாகவும், வெள்ளைப் புலிக்கு சிகிச்சையளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
» எழுபது வயதில் சிண்ட்ரெல்லா எழுதியவர்! - கதை சொன்னவரின் கதை
» அரசு மருத்துவர்களின் சம ஊதிய கோரிக்கையை உடனே நிறைவேற்றுக: அன்புமணி ராமதாஸ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago