மீன்பிடி தடைக்காலத்தில் பாலை மீன் வணிகத்தைத் தடுக்கவும்: மக்கள் நீதி மய்யம்

By செய்திப்பிரிவு

சென்னை: மீன்பிடி தடைக்காலம் என்பது அரசுக்கும், மீனவர்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கவேண்டும். தடைக்காலம் முடியும் வரை பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்து வணிகம் செய்வதை மீன்வளத்துறை நிறுத்தி வைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், "91 நாள் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஆனால், ஒரு சில இடங்களில் சோனஸ் எனும் பாலைமீன் குஞ்சுகளை மீன்வளத்துறை அனுமதியுடன் பிடித்து தனியார் பண்ணைகளுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது கடல்வளத்தைப் பாதிக்கும். பாலை மீனை உண்ண வரும் பெரிய மீன்களின் வரத்து குறைந்து மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தவிர, தடைக்காலம் என்பது அரசுக்கும், மீனவர்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கவேண்டும்.

தடைக்காலம் முடியும் வரை பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்து வணிகம் செய்வதை மீன்வளத்துறை நிறுத்தி வைப்பதை பரிசீலிக்க வேண்டும்" என பதிவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்