ராமேசுவரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள.
இதையடுத்து இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அந்நாட்டுத் தமிழர்கள் அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டம் சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி(56), அவரது மகன் தயாளன்(27), மனைவி லதா(26), இவர்களது 2 மகள்கள் உட்பட 5 பேர் இலங்கையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு படகில் புறப்பட்டனர். இவர்கள் நேற்று அதிகாலை தனுஷ்கோடி சேராங்கோட்டை கடற்கரைக்கு வந்தனர்.
தகவலறிந்து மெரைன் போலீஸார் அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர் குடும்பத்தை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தினர். அப்போது இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் அங்கு வாழ வழியின்றி தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். பின்னர் 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். மார்ச் 22 முதல் வந்த இலங்கை அகதிகள் எண்ணிக்கை தற்போது 80ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago