கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் 2-வது முறையாக போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வழக்கின் விசாரணை சூடு பிடித்துள்ளது. கூடுதல்அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கோவை அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், சகோதரர் மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணனிடம் நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் தனிப்படை போலீஸார் முன் நாராயணன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு வழக்கில் முக்கியநபராக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், கொள்ளை சம்பவத்துக்கு பிறகு சில நாட்களில் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். முன்பு அவர் ஆறுக்குட்டியிடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago