தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயரை மாற்றுவார்கள்: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என திமுக அரசு விரைவில் பெயரை மாற்றும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரூ.5 கோடி நில மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் 6-வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிழக்கு கடற்கரை சாலை தேசிய அளவில் பிரபலமானது. காஷ்மீரில் இருப்பவருக்கு கூட தெரியும். கிழக்கு கடற்கரை சாலை என்பதே நல்ல அழகான பெயர். இதற்கு கருணாநிதியின் பெயரை வைக்கின்றனர். புதிய திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைத்துக்கொள்ளவதில் தவறில்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்களை மூடிவிட்டு, கருணாநிதி பெயரில் புதிய உணவகத்தை திறக்க திட்டமிட்டுள்ளனர். கூடிய விரைவில் தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என பெயரை மாற்றவும் வாய்ப்புள்ளது. மாநிலங்களவை எம்பி பதவிகளை யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து தலைமை முடிவெடுக்கும்.

நடிகை சித்ரா மரணத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறினால், காவல்துறை விசாரிக்கட்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கட்டும். கனிமொழிக்கு கட்சியில் எந்த பாத்திரமும் இல்லை. இந்த ஆட்சியில் நிழல் முதல்வர்களாக சபரீசன், உதயநிதி செயல்பட்டு வருகின்றனர். உதயநிதிக்கு மகுடம் சூட முடிவெடுத்து, அவரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். வாரிசு அரசியல் நடக்கிறது.

திமுக அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. திமுக ஆட்சியில் பொதுவாகவே ஜனநாயக அரசியலுக்கு பதிலாக, ஜமீன்தார் அரசியலை நடத்துவார்கள். 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தப்பித்தவறி திமுகவினர் பதவிக்கு வந்துவிட்டனர். அடுத்த தேர்தலில் திமுகவைவிட 10 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.

திமுக ஆட்சியில் போலீஸாருக்கு பாதுகாப்பு இல்லை. காவல்நிலைய மரணங்கள் அதிகரிக்கின்றன. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் திமுக அரசு மீது வெறுப்பில் உள்ளனர். இந்த ஆட்சியின் அவலநிலை 2024 மக்களவை தேர்தலில் தெரியவரும்.

தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் அதிமுகவின் நிலைப்பாடு. இலங்கை மக்களுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசும் ஏராளமான உதவிகளை செய்துள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். ஒன்றரை லட்சம் மக்களை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்ய காரணமாக இருந்துவிட்டு, இப்போது நிவாரணப் பொருட்களை அனுப்புவதை மக்கள் நம்ப தயாராக இல்லை. இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்