சென்னை: கோயம்பேடு வணிக வளாக காய், கனி, மலர் உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வணிகர் தினமான வரும் 5-ம் தேதி கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளை அடைத்து வணிகர் தின ஒற்றுமையை பறைசாற்றுவர். திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் வணிகர் தின மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் கோயம்பேடு வியாபாரிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் கோயம்பேடு சந்தை மேம்பாட்டு பணிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும், கோயம்பேடு சந்தை சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து தந்ததற்காக நினைவுப் பரிசு வழங்குகிறோம்.
கோயம்பேடு சந்தை தவிர அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த விலைக்கு காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்வதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைப்பது தொடர்பான கேள்விக்கு பொதுச் செயலாளர் சீனிவாசன் பதில் கூறும்போது, “மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, மாம்பழங்கள் பழுக்க வைப்பது குறித்த வழிமுறைகளை வியாபாரிகளுக்கு சொல்லித்தர வேண்டும். இதை அரசுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago